• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மறுமணமா பிக்பாஸ் பவானி மறுப்பு

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாவனியும் ஒருவர். 100 நாட்களுக்கு மேலாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அதன்பிறகு ஏற்பட்ட தனது இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது என்று தெரிவித்திருந்தார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமீர் தன்னை காதலிப்பதாக கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார் பாவனி.

இந்த நிலையில் ரசிகருடன் அவர் உரையாடியபோது, திருமணம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். அதற்கு, வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை. எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.