• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி

BySeenu

Jan 27, 2025

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில், கோவை நேசனல் மாடல் பள்ளியில் பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி 500-க்கும் மேற்பட்ட இளம் கண்டு பிடிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

கோயம்புத்தூரில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சியின் வெற்றி இந்திய இளைஞர்களை நாளைய கண்டுபிடிப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கும் திறனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 12 – 17 வயதிற்குட்பட்ட மாணவர்களை புதுமை படைப்புகளை உருவாக்கும் பாதைக்கு ஊக்கப்படுத்துவதன் வாயிலாக, ஐ.நா.சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகும் அதே வேளையில் நடைமுறை சிக்கல் களையும் தீர்வுகளுடன் உலகளாவிய பிரச்சினைகளை சமாளிக்கத் தயாராகும் புதிய தலைமுறை மாற்றத்தை உருவாக்குபவர்களை இந்தத் திட்டம் கண்டறிந்து வளத்தெடுக்க உதவும் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தேசிய அளவில் இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள் பல்வேறுகட்டங்களாக நடைபெற்றன. ஐஎக்ஸ்புளோர் அறக்கட்டளை மற்றும் அடல் கண்டுபிடிப்பு இயக்கம், நிதி ஆயோக் அமைப்புகள் இணைந்து இந்த போட்டியை நடந்தியது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,100 இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து மொத்தம் 258 சமர்ப்பிப்புகள் பெறப்பட்டன. அவற்றில் நவீனகால சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையிலான மனித வாழ்விற்கு பெரிதும் பயனளிக்கும் புதுமையான படைப்புகளாக அமைந்த அறிவியல் அறிஞர்களின் இறுதிகட்ட பரிசீலனைக்கு பிறகு 128 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த அறிவியல் கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புது டெல்லி, இந்திய விமானப்படை, ஏர்கம்மொடர் அஜய் குண்ணத் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரோட்டேரியன் ராஜேந்திரன் மற்றும் ரோட்டேரியன் நிகழ்ச்சித் தலைவர் ஆர். நவநீதகிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை அறிவியல் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

இந்த அறிவியல் கண்காட்சியில் முதன்மை விருந்தினராக எல். ஜி. எக்விப்மெண்ட் நிறுவன தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் வேணுமாதவ், ஐஎக்ஸ்ப்ளோர் அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் ராமலதா மாரிமுத்து, புரோபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் வித்யா செந்தில்குமார் (சந்தைப்படுத்தல் அண்டு பிராண்டிங்) மற்றும் கோவை பாரடே ஓசோன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே. விவேகானந்தன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.கண்காட்சி நடுவர்களாக ரூட்ஸ் நிறுவன முன்னாள் துணைத்தலைவர் ஏ. நாராயணசாமி, டியூஆர்ஓ கிட்சன் ஆட்டோமேட்ஸ் நிறுவன இன்னவேசன் பிரிவு தலைவர் டாக்டர் என்.ஆதர்ஸ் விக்ரம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.சசிகலா, ஜாப்பனீஸ் பிளஸ் – எஸ். எஸ். டி குளோபல் நிறுவன இயக்குனர் ரேகா நவநீதகிருஷ்ணன், பாஸ் டிஜிடல் நிறுவன சீனியர் உதவி ஆலோசகர் எஸ். செல்வி, பாஸ் குளோபல் சாப்ட்வேர்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவன திட்ட உரிமையளர் அஸ்வின் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.