சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8லட்சம் மதிப்புள்ள உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ்ராமநாதன், விஜயகுமார், சரவணன், சேதுநாச்சியார்வீரக்காளை, மகேஸ்குமார், கீதாகார்த்திகேயன், மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.