தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காள் பட்டி ஊராட்சி ,அழகாபுரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கட்ட ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஐயப்பன், திருப்பத்துார் வாசகன் முன்னிலை வைத்தனர். அதனை தொடர்ந்து பழைய கோட்டை ஊராட்சியில் பெரிய ஓடையில் பாலம் கட்ட பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்ததின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் மகாராஜன் பரிந்துரை அடிப்படையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மொட்டனூத்து ஊராட்சி ஆசாரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி, தலைமையாசிரியர் ஜெயா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதா ஜெயக்குமார், ஒப்பந்ததாரர்கள் பிரகாஷ் ,பொன்னரசு, தொந்திராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.