• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை..!

ByKalamegam Viswanathan

Jan 8, 2024
இராஜபாளையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் பூமி பூஜை நடைபெற்றது. 
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் சட்ட மன்ற உருப்பினர் தங்கபாண்டியன் பாராளுமன்ற உருப்பினர்  தனுஸ் ஆ குமார் ஆகியோர் தலைமையில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மாலையாபுரத்தில்  10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி மருதுநகரில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் வாறுகால் வசதி, தென்றல் நகரில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நூலகக்கட்டிடம் திருவள்ளுவர் நகரில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக் கட்டிடம் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம்,  எம்.பி.கே.புதுப்பட்டியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் துணைத் தலைவர் துரைகற்பகராஜ் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரமசிவம், பாலசுப்பிரமணியன், நூலக அலுவலர் அரசு அதிகாரிகள் மற்றும்  கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.