• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்!

ByP.Kavitha Kumar

Jan 13, 2025

தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது
பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை நமது முன்னோர்கள்
கொண்டாடி வந்துள்ளனர்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகிப் பண்டிகையை கொண்டாடினர். பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் காற்று மாசு ஏற்பட்ட நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்ததால் காற்று மாசு சராசரி அளவில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால், பனியுடன் புகையும் கலந்து புகைமூட்டமாக உள்ளது. இதனால்  சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.