திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மலேசியாவில் இருந்து வந்த பிரபல நடன கலைஞர் டாக்டர் இந்திராணி சுகுமார் தலைமையில் 36 நடை கலைஞர்கள் வருகை தந்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் தங்கள் பரதநாட்டியத்தை நடனமாட ஏற்பாடு செய்துள்ளோம் இதில் முதல் கட்டமாக நேற்று திருச்செந்தூரில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினோம் அதனைத் தொடர்ந்து இன்று முதலாவது படைவீடு ஆன திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் எங்களது பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது .
மலேசியாவில் இருந்து ஏதாவது குழுவினர் வருகை தந்துள்ளோம் இதில் சீனப்பெண் 32 வயது புய்டின் என்ற நடன கலைஞரும் மலேசியாவின் பூர்வீககுடியான லீனாநதிரா (வயது7) என்ற சிறுமியும் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இறைவனின் சன்னதியில் எங்களது நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சென்னையை சேர்ந்த ஜெய சுஷ்மிதா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மலேசிய பிரபல நாட்டிய கலைஞர் இந்திராணி சுகுமார் கூறினார் .




