• Mon. May 13th, 2024

கோவையில் பாரதப்பிரதமர் ‘ஸ்வநிதி’ திட்டம் தொடக்கம்..!

Byவிஷா

Nov 1, 2023
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் அடையாள அட்டைகள் இலவசமாகப் பதிவு செய்யும் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. 
ஸ்வமித்வா என்பது பஞ்சாயத்ராஜ் அமைச்சகத்தின் ஒரு சிறப்பான திட்டமாகும். இது கிராமப்பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்குச் சொத்துரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. நகர்ப்புறங்களில் உள்ளது போன்று கிராமத்தில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கும் இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலச்சொத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
இந்த நிகழ்ச்சியை பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி துவக்கி வைத்தார். இதில், ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், 
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் “ஸ்வநிதி” திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் அடையாள அட்டைகள் இலவசமாகப் பதிவு செய்யும் நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி துவக்கி வைத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *