• Thu. May 9th, 2024

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர வேண்டும்- ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் பேட்டி…

BySeenu

Oct 31, 2023

பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு மட்டுமே கல்வி மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருவதால் இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அந்நாட்டிற்கு வந்தால் இங்கு உள்ளவர்களுக்கு தொழில் தொடங்க ஒரு வாய்ப்பாக அமையும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல்,

பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளது.ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படும் கல்லூரிகள் உள்ளன.இந்தியாவில் போல் அங்கு இல்லை. இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்து கொண்டிருக்கிறோம். அந்த நாட்டில் தொடங்க நிறைய வாய்ப்பு உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு வியாபாரமாகவும் இருக்கும். எங்கள் நாடு ஆஸ்திரியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு.

இந்தியாவுக்கும் பப்புவா நாட்டிற்கும் 80லிருந்தே உறவுகள் உள்ளது.அங்கு கனிம வளம், விவசாயம் சம்மந்தபட்டதும் அதிகம் உள்ளது. சாட்டிலைட் தொடர்பாக இந்தியாவிலிருந்து பப்புவா நாட்டிற்கு வரும் 25,ஆம் தேதி இஸ்ரோ குழுவினர்கள் வருகிறார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடத்திற்கு 80ஆயிரம் மாணவர்கள் வெளியில் வருகிறார்கள்.10 ஆயிரம் பேர் தொழில் படிப்பு,பத்தாயிரம் பேர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.10 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது.இதனால் 50 ஆயிரம் மாணவர்கள் மேல் துறைக்கு போக முடியாமல் உள்ளனர்.

அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம்.அங்குள்ள இந்தியர்கள் , நவராத்திரி கொண்டாடினர்.இந்தியர்கள் வெளி நாட்டில் ஒற்றுமையாக உள்ளனர்.வெளிநாடு தமிழர்கள் தங்களது கலாச்சாரத்தை மறக்கவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *