• Fri. Sep 29th, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Jun 18, 2023

நரைமுடியை கருப்பாக மாற்றும் கருஞ்சீரகம்:

இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை வாங்கி உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து ஒரு இரும்பு வானிலையில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.  அது ஏற்கனவே கருப்பாக தான் இருக்கும். இருந்தாலும் சூடு பறக்க பறக்க கருஞ்சீரகத்தை ஐந்து நிமிடம் வறுத்து, நன்றாக ஆற வைத்து விடுங்கள். இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். நைசாக இது அரைபடாது. திப்பி திப்பியாகத்தான் அடைபடும். கொஞ்சம் கூடுதலாக வறுத்து அரைத்து இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தும் வைத்துக்கொள்ளலாம்.

இப்போது வறுத்து அரைத்த கருஞ்சீரகம் இருக்கும் அல்லவா. அதை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதில் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், அப்படி இல்லை என்றால் விளக்கெண்ணெய் ஊற்றி கலக்கலாம். உங்களுக்கு தலைவலி வரும். தலைபாரம் இருக்கிறது. குளிர்ச்சி உடம்பு என்றால் விளக்கு எண்ணெயை தவிர்த்து விடுங்கள். வெறும் தேங்காய் எண்ணெயை ஊற்றி இதை பேக்காக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேக்கை அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். அதன் பிறகு இதை தலையில் அப்ளை பண்ணலாம்.

இப்போது இந்த கருஞ்சீரகம் தேங்காய் சேர்த்த கலவையை உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி, தலை முழுவதும் இதை நன்றாக அப்ளை செய்ய வேண்டும். எந்தெந்த இடத்தில் நரைமுடி இருக்குதோ, அந்த இடத்தில் எல்லாம் கூடுதல் கவனம் எடுத்து அப்ளை செய்யுங்கள். அதன் பிறகு அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை கூட இது தலையில் இருக்கலாம் தவறு கிடையாது. பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடலாம்.

வாரம் இதை தொடர்ந்து செய்து வரும்போது உங்களுடைய நரைமுடி கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாறும். புதுசாக வேலிலிருந்து வளரக்கூடிய முடிகள் கருப்பு முடிகளாகத்தான் வளரும். நரைமுடியாக வளரவே வளராது. முழுமையாக நம்பி இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம் பக்கவிளைவுகளும் வராது. இதோடு சேர்த்து உங்களுக்கு கரிசலாங்கண்ணி இலைகள், பூக்கள் கிடைத்தால் அதை வாங்கி அரைத்தும் தலையில் ஹேர் பேக்காக போடலாம். முடி கருகருவென அடர்த்தியாக வளரும். முடி உதிர்வதும் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed