கண்கள் மற்றும் முகப்பொலிவுக்கு
வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும்.

பப்பாளிப் பழத்தை தினமும் முகத்தில் தடவி கொஞ்ச நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் முகம் பிரகாசமாகவும் நல்ல பொலிவுடன் பளப்பளப்பாக இருக்கும். அதே போல முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருக்கம் மறைந்து அழகாக காணப்படும். தினமும் உறங்கப்போகும் முன்பாக மஞ்சள், தேனுடன் குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுப்பாகும்.





