• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சண்டைக்கு பஞ்சமில்லை – பீஸ்ட் பட இயக்குநர்

பீஸ்ட் 80% சண்டை காட்சி நிறைந்த படமாக இருக்கும் என ஸ்டண்ட் இயக்குநர் அன்பறிவு  தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விஜய் நடிப்பில் இதுவரை வராத அளவுக்கு ஒரு டார்க் ஆக்‌ஷன் காமெடி திரைப்படமாக பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் 20-ஆம் தேதி, படக்குழு முக்கிய சண்டைக்காட்சிகாக ரஷ்யா செல்லவுள்ளனர்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஸ்டண்ட் இயக்குநர் அன்பறிவு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பீஸ்ட் 80% சண்டை காட்சி நிறைந்த படமாக இருக்கும்” என தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.