• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் ட்ரெயிலரும் ப்ளூ சட்டை மாறனின் கருத்தும்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியிருந்தார்

முன்னதாக படத்தின் பாடல்கள் அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா போன்றவை வெளியாகி அதிகமான வரவேற்பை பெற்றன. இதனிடையே கடந்த 2ம் தேதி படத்தின் ட்ரெயிலர் வெளியாகி தற்போது 30 மில்லியன் வியூஸ்களையும் ஏராளமான லைக்ஸ்கள் கமெண்ட்டுகளையும் பெற்று அதிரடி கிளப்பி வருகிறது. இந்நிலையில், இந்த ட்ரெயிலர் திரையரங்குகளில் மற்ற படங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த 2.56 நிமிட ட்ரெயிலரை காண மதுரை திரையரங்கில் ஒருவருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சினிப்பிரியா என்ற திரையரங்கில் மூவருக்கு 150 ரூபாய் இந்த ட்ரெயிலரை பார்ப்பதற்காக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கெட்டுக்கான புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரிய ஹீரோ மற்றும் அவரது வெறித்தனமான ரசிகர்களை வைத்து செய்யும் இத்தகைய திரையரங்க உரிமையாளர்கள் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளிக்காட்டியுள்ளார்.