இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்ச்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ஒரு ஷாப்பிங் மாலில் விஜய். நடன இயக்குனர் சதிஷ், பூஜாஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் டாக்டர் பட பிரபலங்கள் எதோ ஒன்றை உற்று பார்ப்பதுபோல் உள்ளது!