

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இதுகுறித்த மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகின்றது. திரைப்படம் படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. யோகி பாபு மற்றும் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இருந்தாலும் கூட விடிவி கணேஷின் நடிப்பு திறமை தான் படத்தில் பிளஸ் என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
