விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த கடற்கரை ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக திமுக ஒன்றிய செயலாளர் அறிவிக்கப்பட்டதால் திமுக கட்சியினர் மகிழ்ச்சி அடைந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

தொடர்ந்து சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கடற்கரைராஜ்க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.




