வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்.இந்த ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ,எதிர் கோட்டை, வெற்றிலையூரணி, அப்பய நாயக்கன்பட்டி , சிப்பிப்பாறை குகன் பாறை உள்பட 48 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிரமங்களில் சுகாதாரத்தை பேணிக் காப்பதற்காக தமிழக அரசால் பேட்டரி வாகனங்கள் மக்கள் தொகைகு ஏற்ப ஊராட்சிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் பேட்டரி வாகனங்கள் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனங்கள் வெயிலுக்கும் மழைக்கும் வீணாகி வருகின்றன. ஆகையால் வாகனங்கள் சேதமடைவதற்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.