• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக பேட்டரி ஆட்டோ…

BySeenu

Jun 18, 2026

கோவை தலைமை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்காக ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சரவண பிரியா ஆகியோர் முன்னிலையில் ரோட்டரி கிளப் தலைவர் பொன்ராஜ் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் இதனை வழங்கினர்.

இது குறித்து Rotary club south இன் தலைவர் பொன்ராஜ் கூறுகையில் கோவை அரசு மருத்துவமனையில் பேட்டரி ஆட்டோவை வழங்கியதாகவும் இது இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு உணவை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் பிரேத பரிசோதனைக்கான காடா துணியையும் வழங்கியதாக தெரிவித்தார்.