மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு 2ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள மாவட்டங்களில் அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
