• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி..,

BySeenu

Aug 28, 2025

கோவையில் நடைபெற்ற 59ம் ஆண்டு பி.எஸ்.ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி துவங்கியது.

இதில் ஏ பிரிவில் சென்னை – இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுதில்லி – இந்திய விமானப்படை அணி, கோவை – இராஜலட்சுமி ஹெச்எஸ்எ போன்ற அணிகளும், பி – பிரிவில் புதுதில்லி – இந்திய இராணுவ அணி;, சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி;, கேரளா – கேரளா மாநில மின்சார வாரிய அணிகள் உட்பட 8 அணிகள் பங்கேற்றன்.

இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சென்னை – இந்தியன் வங்கி அணியும் திருவனந்தபுரம் – கேரளா மாநில மின்சார வாரிய அணியும் போட்டியிட்டன. இதில் இந்தியன் வங்கி அணி 68 – 50 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து லோனாவாலா – இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 81 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக 1,00,00 ரூபாய் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக 75,000 ரூபாய் மற்றும் கோப்பையும், மூன்றாம் இடம் பெற்ற இந்திய விமானப்படை அணிக்கு 50,000 ரூபாய் மற்றும் கோப்பையும், நான்காம் இடம் பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு 25,000 ரூபாய் மற்றும் கோப்பையும், இந்தியன் வங்கி அணியின் வீரர் பாலாவுக்கு சிறந்த விளையாட்டு வீரருக்குகான விருது மற்றும் ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் பவன்குமார், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.