மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் செல்லப்பாண்டி வயது 32 இவர் சோழவந்தான் வந்து இவரது ஊருக்கு திருவேங்கடம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

திருவேடகம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவில் அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் மோதி செல்லப்பாண்டி தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.