உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 மாததிற்கான உணவுக்கான பொருட்களை வழங்கி திமுகவினர் அறுசுவை விருந்து அளித்தனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் 2 மாததிற்கு தேவையான உணவிற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.

தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தாக அளிக்கப்பட்டது, நகர செயலாளர் தங்கப்பாண்டியும் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலமுடன் வாழ பிராத்தனை செய்தனர்.