பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கணேஷ், கூலிப் மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான கூலிப் , கணேஷ் போயிலை அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக கணேஷ் புகையிலை பாக்கெட் ஒன்று 150 ரூபாய் கூலி ரூபாய் 150 ரூபாய் என சர்வ சாதாரணமாக அனைத்து கடைகளிலும் தேனி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று சமூக வலைதளங்களில் கொடு விலார்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட கணேஷ், மற்றும் கூலிப்புகள் மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.