• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..,

BySeenu

Jan 27, 2026

கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அரசு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எல்ஐசி, ஆர்பிஐ போன்ற மத்திய அரசு நிறுவனங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை என்று இருக்கக்கூடிய நிலையில் தங்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையிலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் சுமார் 5000 வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மத்திய ரயில் நிலையம் எதிரே உள்ள பேங்க் ஆப் பரோடா வளாகத்திற்குள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் எனவும் வலியுறுத்திய் அவர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தால் கோவையில் சுமார் 5000 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும் தங்களது இந்த போராட்டத்திற்கு மத்திய அரசுதான் முழுமையான காரணம் என குற்றம் சாட்டினர்.

டிஜிட்டல் பேங்கிங் வந்ததை தொடர்ந்து வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாகவும் அனைவரும் டிஜிட்டல் பேங்கிங் ஏடிஎம் போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர். நாட்டிலேயே வங்கி ஊழியர்கள் பணி என்பது அதிக வேலைச்சுமை நிறைந்த பணியில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் நாங்கள் சனி மற்றும் ஞாயிறு இரண்டு தினங்களும் தொடர்ச்சியாக விடுமுறை கேட்கவில்லை வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பது தான் தங்களுடைய கோரிக்கை என கூறினர்.

மேலும் தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.