• Thu. Feb 13th, 2025

பெங்களூரு சிறையில் சொகுசு வசதி கேட்டு லஞ்சம் கொடுத்த வழக்கு:
சசிகலா, இளவரசி இருவருக்கும் முன்ஜாமீன்..!

Byவிஷா

Mar 11, 2022

சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் தந்ததாக எழுந்த புகாரில் சசிகலா, இளவரசி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். தற்போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் தந்ததாக எழுந்த புகாரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு பேரும் ஆஜரானார்கள். நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலா மற்றும் இளவரசியும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். நீதிமன்றத்தின் ஆஜரானபோது, சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறைத்துறை முன்னாள் அதிகாரிகள் சுரேஷ், கஜராஜா மகனூர் ஆகியோருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.