புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று பந்த போராட்டம் சாலைகள் வெறிச்சோடியன.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாத காரணத்தால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்திருந்தார். மாநில அந்தஸ்து என்பது அரசியலுக்காக பேசப்படுகிறது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கருத்து தெரிவித்தார்.
இத்தகைய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்தார். புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. குறைவான அளவில் பேருந்துகள் இயங்குவதாலும், ஆட்டோக்கள் இயக்கம் பாதிப்பாலும் சாலைகள் வெறிச்சோடின. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.