• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

Byவிஷா

Dec 23, 2023

மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு அதிக விடுமுறை அளிக்கப்பட்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குனர் அறிவித்துள்ளார். மழை வெள்ளம் என்று பல மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனை ஈடு செய்ய அரையாண்டு விடுமுறையில் பல பள்ளிகள் செயல்படுவதாக தகவல் வெளியான நிலையில் இதனை தடுப்பதற்காக அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் விடுமுறை முடிவடைந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.