• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

ByG.Suresh

Jun 17, 2024

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. இன்று சிவகங்கை ஈத்கா திடலில் சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் இன்று காலை 6- 45 மணிக்கு துவங்கிய இந்த சிறப்பு நிகழ்வு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்குப் பின்னால் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதனுடைய இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இஸ்லாமியரின் சிறப்பு தொழுகையை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.