அகஸ்தீஸ்வரம், தோவாளை, கிள்ளியூர், கல்குளம் பகுதிகளை சேர்ந்த 658_பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்வு கொட்டாயத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் பட்டா பெறும் பயனாளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ். இந்த பகுதியில் வாழ்ந்த அய்யா வைகுண்டர் தோற்றுவித்த அய்யா வழி என்னும் மார்க்கம் சமுகத்தில் அனைவரும் சமம் என்று போதித்தது. சாதிய பாகுபாடு காட்டுபவர்களை நீசன என அடையாளப்படுத்தினார்.
இன்று தமிழகத்தில் அய்யா வைகுண்டர் மற்றும் அவர் போதித்த அறம் சார்ந்த போதனையை சாதனம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அய்யா வைகுண்டரின் சிந்தனை, நோக்கம் தாளக்கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்ற கொள்கையை போதித்தார்.
அய்யாவின் போதனையை சிந்தனையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது என உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் பாபு மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் இலவச பட்டா வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.