தேங்காய் பால் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த பேக் கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு ‘பளிச்’ சிகிச்சை.