
ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வெள்ளரிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணமாக்குகிறது. மற்றும் வெயிலால் கருத்த சருமத்தை அதன் இயல்பு நிலைக்கு திரும்ப செய்கிறது. இந்த பேஸ்பேக் சருமத்துக்கு புத்துணர்வை அளித்து வறட்சி ஏற்படுத்தாமல் மென்மையாக பராமரிக்க உதவுகிறது.
