• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நரிக்குடி அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

ByBala

Apr 22, 2024

எழுவணி சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எழுவணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோயிலில் ராஜகோபுரம் மற்றும் 21 பந்து 61 சேனை பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேக விழா இன்று 22.04.2024 வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் எழுவணி, ஆலத்தூர், ஓடாத்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.