செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வை உயர்த்தவும் மற்றும் உடல் உறுப்பு தான வாக்குறுதி வாங்குமாறு மக்களை தூண்டவும் விழிப்புணர்வு நடைப்பயணம் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் துணை ஆணையர் போக்குவரத்து சமாய் சிங் மீனா மருத்துவமனை செயலாக்க இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமை இயக்குநர் அதிகாரி முகமது ஃபருக் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடைப்பயணத்தை துவக்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் மருத்துவமனை வளாகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் மெப்ஸ் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையில் பதாகங்களை ஏந்தி விழிப்புணர் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.