• Mon. Apr 29th, 2024

பாரத் டெக்ஸ் 2024- ஐவுளி கலாச்சார கண்காட்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ரோட்ஷோ..!

BySeenu

Nov 17, 2023

புது டெல்லியில் பாரத் மண்டபம், யஷோபூமியில் ஜவுளி கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வு கண்காட்சி, 2024 பிப்ரவரி 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது, இதனை விளம்பரத்தும் விதமாக, கோவையில் முதல் ரோட்ஷோ மத்திய அரசின் பங்களிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு..,

இந்தியாவின் தமிழகத்தில் இதன் முதல் விழிப்புணர்வு தொடக்க விழாவாக கோவை அவினாசி சாலை நட்சத்திர ஓட்டலில் விழிப்புணர்வு ரோட்ஷோ, ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் நடைபெற்றது.

இந்தியாவில் பெரும் ஜவுளி நிகழ்வாக பாரத டெக்ஸ் 2024 கவுண்டவுன் தொடங்கியது, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலிங் கூட்டமைப்பால் வருகின்ற 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்  கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தின் பெருமை, பன்முக தன்மையை பறைசாற்றும் மையமாக நடத்தப்படுகிறது. தமிழகம், திருப்பூர் ஜவுளித்துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது பாரம்பரிய மற்றும் புதுமைகளின் அனுபவத்தை எதிர்பார்க்கலாம் என்றனர்,

இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்களும் மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் கைகோர்த்து வருவதால் 2024 இல் நடைபெற இருக்கும் மாபெரும் கண்காட்சிக்கு ஒரு முன்னோட்டமாக இந்த ரோட்ஷோ விளங்கியது.

இந்தியாவின் ஜவுளித்துறையின் சிறப்பை உலகெங்கிலும் உள்ள ஜவுளித்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், பிரதிநிதிகள், ஜவுளி ஆர்வலர்களை ஒருங்கிணைத்து பாரத டெக்ஸ் இக்கண்காட்சி சர்வதேச ஜவுளி சந்தையில் முன்னணி பெற உதவும் என்றார்கள்,

தமிழக கைத்தறி அமைச்சர் காந்தி பேசுகையில்,

தமிழகத்தின்  கைத்தறி பிரமாண்டமான ஜவுளி கண்காட்சியில் தமிழகத்தின் புகழ் பாரம்பரியம்,கலாச்சாரத்தை பறை சாற்றும், கைவினைத்திறன், உலகில் உயர்ந்து நிற்கும் எனறார். தொடர்ந்து பேசிய மத்திய ஜவுளி துறையின் இணைச் செயலாளர் ராஜீவ் சக்சேனா கூறியதாவது, இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி பயணத்தை இது உற்சாகமான ரோடு முதல் முதலில் கோவையில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உலக அரங்கில் வெளிப்படுத்தும் ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு சான்றாகவும் பாரத் எக்ஸ் 2024 நமது இந்திய கொடியை பிரதிபலிக்கும் கைத்தறி மூலம் நமது கைவினைக் கலைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தின் வலிமை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது பல்வேறு வகையான ஜவுளிகளை கண்காட்சி தளத்துக்கு கொண்டுவரும் மற்றும் மாநிலத்தின் தொழில்துறையின் வலிமையை வெளிப்படுத்தும்  இடமாக நம்புகிறோம் என்ற பாரத் டெக்ஸ் விரிவான விளக்க கண்காட்சி கொள்கைகள் பற்றி விவாதங்கள் கேள்வி மற்றும் நிலையில் டெக்ஸ் 2024 காண தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை இந்த தளம் வலியுறுத்தியுள்ளது. வீட்டு உபயோக ஜவுளி தரை உரைகள் இலைகள் நூல்கள் துணிகள் தரை விரிப்புகள் பட்டு மற்றும் கைத்தடியில் விசைத்தறி பொருட்கள் ஜவுளி சார்ந்த கைவினைப் பொருட்கள் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் பல பொருள்களுக்கு பாரத் டெக்ஸ் 2024 ஒரு சரித்திர கண்காட்சியாக அமையும் நிலைத்தன்மை மட்டும் மறுசுழற்சி உலகளாவிய விநியோக சங்கிலிகள் விவாதங்கள் டிஜிட்டல் மாயமாக்கல் துணி சோதனை மையங்கள் தயாரிப்பு செயல் விளக்கங்கள் மூன்று தலைமுறைகள் சார்ந்த கைவினை கலைஞர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் கலைக்கின தனியாக ஜூகல்பந்தி உலகளாவிய பிராண்டுகள் மற்றும் சர்வதேச வடிவமைப்பாளர்கள் உள்ளடக்கிய தனி நிகழ்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக பாரத டெக்ஸ் இருக்கும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தமிழகத்தில் முன்னணி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் அமைப்புகள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசின் சார்பில் அணில் குமார், பவுன் கல்யாண் தமிழகத்தின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளர் சுந்தர்ராம் சைமா, நிறுவன தலைவர் அன்புராஜ் மற்றும் கருணாநிதி, ரவிக்குமார், சக்திவேல், ஸ்ரீதர், முரளி, பாலகிருஷ்ணன், பிரபு, தாமோதரன், கரூர் கோபாலகிருஷ்ணன், அஸ்வின் என ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டுமே அதன் அமைப்புகள் கலந்து கொண்டனர். 2024 பிப்ரவரி டெல்லியில் நடைபெறும் அந்த கண்காட்சியில் பங்கேற்று எங்களது உற்பத்தி மற்றும் ஜவுளி மேம்படுத்த கண்டிப்பாக இருக்கும் என ஏராளமானவர்கள் உறுதி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *