• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Byகுமார்

Sep 25, 2022

உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டும் நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் (மீனாட்சி மிஷன்) செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருதயநோய் சிறப்பு மருத்துவர்கள் சிவக்குமார்,செல்வமணி,கண்ணன், குமார்மற்றும் ஆழ்வார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்த பேரணி மூன்று மாவடி சந்திப்பில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மாட்டுதாவணியில் நிறைவு பெற்றது.
பேரணியின் போது இதய ரத்தநாள நோய்கள் குறித்தும் மாரடைப்பு வராமல் தடுப்பது, அதற்கு உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவது, இதய நோய்களை தவிர்க்க வழக்கமான நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான வாசகங்களை கைகளில் ஏந்தியபடி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.