• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி

ByP.Thangapandi

Feb 29, 2024

உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்த்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்த்துறை, உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட காவல்த்துறையினர் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரோ பிரவீன் உமேஸ் தலைமையேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் துவங்கிய இந்த பேரணி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த பதாகைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நிறைவு செய்தனர்.,