மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்தி தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மக்களின் வளர்ச்சி திட்ட பணிகளை முறையாக செய்வதில்லை என்றும், அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் எதிர்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் என வளர்ச்சி பணிகளை செய்ய அதிகாரிகள் மறுப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ரஞ்சனி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரஸ்வதி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் முறையாக இல்லை என்றும், வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டி அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.