தேனி மாவட்டம் மேகமலை மணலாறு பகுதியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வளரும் பருவத்தினர் திருமணம் செய்வது குறித்து ஏற்படும் பாதிப்பு குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு கொட்டிக் முரசை அடித்து தெரு நாடகங்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்ரமணியன்
தமிழகத்தில் வளர்கிற பருவத்தில் பெண்கள திருமணம் நடைபெறும் 24 வட்டாரங்களை கண்டறிந்து அவர்களுக்கு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

துணை சுகாதார மையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 2320 கிராமங்களில் வளர்ந்து வரும் வயதில் திருமணம் நடைபெறுவதை தடுக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தெரு நாடகங்கள் மூலம் விப்புணர்வு ஏற்படுத்தபடும் என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இதுவரை 400 மலை கிராமங்களுக்கு மேல் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு கூட நடந்தே சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் மட்டும் தான் வளர்ந்து வரும் வயதில் பெண்கள் கர்ப்பம் ஆகும் விகிதம் அதிகம் இருக்கின்றது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் மட்டும் தான் மக்களை வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் 2 கோடியே 40 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)