தென்இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை கிராமத்தில் தொழிலாளர்களுக்கான அரசுநல உதவிகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றிய தெளிவுரை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார், பொதுச்செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார், மாநில துணை செயலாளர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் முத்துப்பாண்டி விழா ஏற்பாட்டினை செய்து வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை மற்றும் நலஉதவிகள் வழங்கப்பட்டன.









