• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அருகே விழிப்புணர்வு மாராத்தான் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தமிழர் திருநாள் மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே முகவூரில் என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 77-வது குடியரசு தினம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு சிறப்பு விருந்தினர்கள் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தனர்.

8 கி.மீ, 5 கி.மீ, சிறுவர்களுக்கான 3 கி.மீ என மூன்று வகைகளில் வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை, சென்னை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.