பழனி ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் கணேசன், பழனி ரயில்வே காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மயில் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் நர்சிங் கல்லூரி முதல்வர் தலைமையிலான மாணவிகள் ரயில் பயணிகளிடம் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். ரயில் நிலைய நடைமேடைகளையும், தண்டவாள பகுதிகளையும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்தனர்.