• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி..,

Byமுகமதி

Feb 6, 2026

புதுக்கோட்டையில் இயங்கி வரும் தாகூர் அகாடமி தலைமைப் பயிற்சி நிலையத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு நிலையத்தின் நிர்வாகி முனைவர் ஜெகஜீவன்ராம் தலைமை தங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஆசிரியர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு காவல் ஆய்வாளர் J. ஜவஹர் மாணவ – மாணவிகள் மத்தியில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கினார். அவர் அவர் தனது பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி காலத்தில் சிரத்தை எடுத்துக்கொண்டு படித்த விதம், அவர் தான் பிறந்த ஊரான கீரமங்கலத்தில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கு பட்ட சிரமங்கள், அதனாலேயே வெறித்தனமாக படித்து உழைத்து இன்று இந்த அளவுக்கு உயர்ந்ததற்கான காரணம், காவல்துறையில் பணிபுரிந்தாலும் அதில் தான் விரும்பி ஏற்றுக்கொண்ட லஞ்சம் ஊழல் ஒழிப்பு துறையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்தும், அந்தப் பணியின் போது தான் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவற்றை எல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது குறித்தும், காவல் பணியோடு நின்றுவிடாமல் சட்டப்படிப்பு படித்து முடித்து அது தனக்கும் தனது பணிக்கும் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது குறித்தும், மாணவ மாணவியர் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார். மேலும் தாகூர் கல்விப் பயிற்சிக் குழுமத்தின் நிறுவனர் ஜெகஜீவன் ராம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான கறம்பக்குடி பகுதியில் இருந்து தான் பெற்ற கல்வியை மற்ற மாணவர்களுக்கு பயன்படும் விதமாக போதித்து அனைவரையும் கல்வியிலும் வாழ்விலும் உயர்த்தி பார்க்கும் எண்ணம் கொண்டவராக திகழும் அவரது வாழ்வும் இந்த மாணவ மாணவியருக்கு ஒரு பாடமாக திகழ்கிறது.

இது போன்றவர்களை எல்லாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இந்த பயிற்சி நிறுவனத்தில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் தங்களையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். விழாவில் ஏராளமான மாணவர்களும் & ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டனர்கள். ஆசிரியை அகக்கவி நன்றி கூறினார், ஆசிரியர் ராதிகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.