• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அவதார்-2 அட்டகாசமான ட்ரைலர் வெளியீடு

ByA.Tamilselvan

Nov 3, 2022

ரசிகர்களின் பல ஆண்டுகால எதிர்பார்ப்பில் இருந்த அவதார் படத்தின் 2பாகம் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
உலக சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக டெர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் என தனது திரைப்பயணத்தில் பல பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து பிரம்மிக்க வைத்து தொடர்ந்து நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவதார். வேற்றுகிரகவாசிகளை பற்றிய கதைகளத்தில் ரசிகர்களை ஆச்சரியத்தில் முழ்கடித்த படம் அவதார். அடுத்த பாகம் எப்போது வெளிவரும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரசிகர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்ட அவதார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது. அந்த வகையில் அவதார் படத்தின் இரண்டாவது பாகமாக தயாராகியுள்ளது அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பான (அவதார 2) அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் 3ம் பாகம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டத்தின் உச்சமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகில் 160 மொழிகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன்பு வெளியானது.