• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் மாரியம்மன் கோவில் 113 வது ஆண்டு பொங்கல் விழா

Byகுமார்

Aug 16, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் 113 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாவிளக்கு பூஜையும் அன்று இரவு சக்தி கிரகம் எடுக்கும் விழாவும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இன்று 4ம் நாள் நிகழ்சியாக காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜையுடன் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

அவனியாபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.