வருகிற 30ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை பவுர்ணமி நிலவில் சுற்றி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவண்ணாமலையில் இன்றும் பல சித்தர்கள் சுயரூபம் மற்றும் அரூருபமாக வாழ்ந்து வருவதாக வரலாறு. அதனால் பக்தர்கள் மலையை வலம் வந்தால் நன்மைகள் பயக்கும் என்பது நம்பிக்கைகை. அதனால், பக்தர்கள் இந்த மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம் மாதந்தோறும் பவுர்ணமி தினங்களில் பல லட்சக்கணக்கானோர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து, தங்களது ஆசைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், வரும் 30ந்தேதி ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி வருவதால், பொதுமக்கள், பக்தர்கள் கிரிவலம் வருவது குறித்த அறிவிப்பை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி 30-ந் தேதி (புதன்கிழமை) வருகிறது. 30-ந் தேதி காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.