• Tue. Dec 10th, 2024

இன்று பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

Aug 30, 2023

இன்று பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நெகிழியைத் தவிர்த்து, துணிப்பையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு அனைத்துத்துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தாவது..,
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு ( 30.08.2023) காலை 10.37 மணிக்கு தொடங்கி 31.08.2023 காலை 08.13 முடிவடைய உள்ளதை தொடர்ந்து ராஜகோபுரம், அம்மணிஅம்மன் கோபுரம், பேகோபுரம், திருமஞ்சன கோபுரம், ஆகிய நான்கு கோபுர நுழைவாயிலிலும் பக்தர்களுக்கு இடையூறுயில்லாமல் இலவச சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்தின் அலுவலர்கள் மற்றும் தன்னார்வர்லர்களை கொண்டு பக்தர்கள் வரிசையில் செல்ல முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.
மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டகளிலிருந்தும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள். எனவே மருத்துவ துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல், 108 அவரச கால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருத்தல். தற்காலிக பேருந்து நிலையங்கள், மின்விளக்குகள், கிரிவலம் செல்லும் பக்கதர்கள் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் திரும்ப அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் வகையில் தகவல் பதாகைகள் அமைத்தல், 14 கி.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி நகராட்சி துறையின் மூலம் தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோயிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும். நெடுஞ்சாலை துறை, நகராட்சியுடன் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை பணிகள், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். போகுவரத்து துறையின் சார்பில் தற்காலிக பேருந்து நிறுத்தம் நிலையம் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள், பக்தர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதிகளை தற்காலிமாக அமைத்து தர வேண்டும், போக்குவரத்து துறையின் சார்பில் பக்தர்கள் அறியும் வகையில் வழிதடங்களுக்கான விளம்பர பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். மின் பகிர்மான கழகம் சார்பில் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் மின் நிறுத்தம் இல்லாமல் மின்வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
காவல் துறையின் மூலம் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமாரக்கள் சரியான முறையில் இயங்கின்றதா,பொதுமக்கள், பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் கண்காணிக்க வேண்டும். பௌர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையின் வானங்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.