தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்திற்கு கார்களை ஏற்ற சென்ற ஆட்டோ மொபைல் கேரியர் சரக்கு ரயில் பெட்டி தரம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
தாம்பரம் பணிமனையில் இருந்து செல்லும் போது சானடோரியம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் மூன்று பெட்டி தடம் புரண்டது. தடம்புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு கார்களை ஏற்றுவதற்காக lmg எனப்படும் கார்களை ஏற்றும் சரக்கு ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் சானடோரியம் ரயில் நிலையத்திற்கும் இடையில் வரும் போது சரக்கு ரயிலில் நடுப்பகுதியில் இருந்த மூன்று பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. இது ஒரு பெட்டி முற்றிலுமாக கீழே இறங்கிய நிலையில் மற்ற ரெண்டு பெட்டிகள் தண்டவாளம் பகுதியில் இருந்து சக்கரங்கள் கீழே இறங்கின.
தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
எல்எம்ஜி எனப்படும் சரக்கு ரயில்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உற்பத்தியாகும் கார்களை அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஏற்றி சென்று பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று வழக்கம் போல கார்களை ஏற்ற கிளம்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில்வே யார்டு செல்லும் தண்டவாளப் பகுதியில் விபத்து ஏற்பட்டதால் வழக்கமான ரயில் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.