புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று 800க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பேருந்து நிலையம் நகரப்பகுதி திருநள்ளார் கோட்டுச்சேரி உள்ளிட்ட மாவட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். காரைக்கால் மாவட்டத்தின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.இதனால்
புதிய பர்மீட் வழங்குவதையும் ஈ ஆட்டோக்கள் அனுமதிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் பெட்ரோல்-டீசலில் இயங்கும் ஆட்டோக்களுக்கு உள்ள விதிமுறைகளை ஈ ஆட்டோக்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி போக்குவரத்து துறை மூலமாக ஆண்டுதோறும் வழங்கி வந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சீரூடை கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை. எனவே மீண்டும் எங்களுக்கான சீருடைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து இந்த போராட்டத்தில் ஓட்டுனர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடைபெற்று வருகிறது.

இதனால் இன்று காரைக்கால் முழுதும் 800-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஆட்டோ இயக்கப்படாததால் ஆட்டோ பயணிகள் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.