பெற்ற மகனை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே காவேரி செட்டியபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ரஞ்சித் (வயது 25) கூலித்தொழிலாளி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இவரது தந்தை முனியாண்டி (வயது 47) என்பவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வருபவர்.…
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி அசத்திய திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்தையும் நலத்திட்டங்களையும் ரங்கோலியாக வரைந்து அசத்திய திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம்…
தைப்பூசம் நிறைவு, காணிக்கை வரவு ரூ. 3.47 கோடி-பழனி
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 11 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து நேற்றும், நேற்று முன் தினமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ. 3.47 கோடியை தாண்டியது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் பேட்டி…
தமிழக முதல்வர் 159 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்தினை வழங்கியுள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் பேட்டி அளித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பொறியாளர் பிரேம்குமார் லஞ்சம் பெறும்போது பிடிபட்டார். பொறியாளர் பிரிவில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை எடுத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…
நத்தம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறிவிருந்து விழா
நத்தம் அருகே வேட்டைக்காரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது. இன்று நடந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.
தரமற்ற தார் சாலை.., முன்னாள் கவுன்சிலர் தங்கராசு குற்றச்சாட்டு
நெய்க்காரப்பட்டி பெருமாள்புதூர் பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள், அமைக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் கவுன்சிலர் தங்கராசு திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பெருமாள் புதூர் பிரதான சாலை பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள்…
பழனி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் 7 பேர் கைது
பழனி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் கேரளா வாலிபர்கள் 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்து, 1 நாட்டு துப்பாக்கி ,6 தோட்டாக்கள் ,கேரள பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும்…
ஆற்று கரையோர பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு
கொடைக்கானல் சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் உள்ள ஆற்று கரையோர பகுதியில் சுமார் 65 வயதுள்ள ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு, காவல் துறையினர் விசாரணை… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே…




