சோழவந்தானில் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஆர். எம். எஸ். காலனி பகுதியில், கால்நடைகளை வளர்ப்பவர்கள்…
மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்:
மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள ஏபில் கிட்ஸ் சிறப்பு பள்ளியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி சமூக பணி துறையின் மாணவர்கள் மற்றும் மதுரை அணியம் அகடாமி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், தலைமை…
மதுரையில் பஸ் நிறுத்தங்களில் திடீரென நிறுத்தப்படும் ஆட்டோக்கள்…
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் அவதி அடைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பஸ் நிறுத்தங்கள் அருகே ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி ஆட்களை ஏற்றுவதால், பஸ் நிறுத்தங்களில் பஸ்ஸுக்காக…
மதுரை நகரில் தொடர் மழை: குளம் போல மாறிய சாலைகள்:
மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.பகல் நேரங்களில் கடுமையான வெப்பநிலை நிலவினாலும், மாலை நேரங்களில் அதை தணிக்கும் வகையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மதுரை, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், அழகர்…
போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மதுரையில், இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி
சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன்…
ஆடி சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை
மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி சுவாதி முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நரசிம்மர் கோவிலில்,ஆடி சுவாதி முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏளமான பக்தர்கள்…
சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக அரசின் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சோழவந்தான் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள்…
மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில், திருச்சி மாவட்டம் குழித்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான மகாமுனி மற்றும் அவரது உறவினரான ஆனந்த் ஆகிய இருவரும் தூத்துக்குடி சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.காரை ஆனந்த் ஓட்டி வந்து கொண்டிருக்கும் போது,…
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 4வது ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் கூழ்காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர். சண்முகவேல்பூசாரி பூஜைகள் செய்தார்.இதில் பல்வேறு…